தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் பொது விநியோக பொருட்களை தாண்டி மற்ற பொருட்களை விநியோகம் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு விரைவில் விற்பனையாக கூடிய பொருட்களை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ரேஷன் கடை விநியோகஸ்தர்களுக்கு மாதம் 8000 கமிஷன் கிடைக்கும் நிலையில் இதை அதிகரிக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை வந்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக கவுரவ ஊதியம் வழங்கப்படாத நிலையில் கவுரவ ஊதியத்தை வழங்குவதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ரேஷன் கடை ஊழியர்கள் 50,000 வரை வருமானம் ஈட்ட முடியும் என மத்திய அரசின் பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளது ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.