இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள். ரயிலில் கட்டணம் குறைவு என்பதால் ரயில் பயணத்தை தான் அதிக அளவில் பயணிகள் விரும்புவார்கள். அதன் பிறகு வழக்கமாக ரயிலில் பொதுப்பெட்டிகளில் கூட்டம் அதிக அளவு காணப்படும். இந்த பெட்டிகளில் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை என்பதால் வழக்கமாக பொதுப் பெட்டிகளில் கூட்ட நெரிசல் இருக்கும்.‌ இந்நிலையில் பொதுவாக ஒரு ரயிலில் பொதுப் பெட்டிகள் ரயிலின் தொடக்கத்தில் அல்லது கடைசியில் தான் இருக்கும். இது எதற்காக என்று தெரியுமா?. அதாவது பொது பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகள் பெட்டிகளை எளிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலில் தொடக்கம் அல்லது இறுதியில் பொதுப்பெட்டிகள் அமைந்துள்ளது.

இந்த பெட்டியில் ஏராளமான பயணிகள் ஏறி இறங்குவதால் நடுவில் பெட்டியை வைத்தால் சிஸ்டம் சரிந்து விடும். பொதுப் பெட்டியில் இடம் கிடைக்காவிட்டால் மற்ற பெட்டிகளில் நுழைய பயணிகள் முயற்சி செய்வார்கள். இது நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதால் பொது பெட்டிகள் ரயிலில் தொடக்கம் அல்லது இறுதியில் வைக்கப்படுகிறது. மேலும் விபத்து ஏதேனும் நடந்தால் பொது பெட்டியில் அதிக அளவு பயணிகள் இருக்கும்போது அவர்கள் முடிவு அல்லது தொடக்கத்தில் இருந்தால் தான் எளிதான முறையில் இறங்க முடியும் என்பதாலும் பொதுப்பட்டிகள் நடுவில் வைக்கப்படாமல் ரயிலின் இறுதி மற்றும் முடிவில் வைக்கப்பட்டுள்ளது.