ஷிப்ட் டைம் முடிந்ததும் ஊழியர்களை வீட்டுக்கு துரத்தும் வித்தியாசமான நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. மத்திய பிரதேசத்தில்  இந்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில், ஊழியர்களின் ஷிப்ட் நேரம் முடிந்ததும் அவர்கள் பணியாற்றுக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் தானாகவே Shut Down செய்துகொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் தவிர்க்கப்பட்டு, அவர்களுக்கென தனிப்பட்ட நேரம் கிடைக்குமென சம்பந்தப்பட்ட நிறுவனம்  நம்பிக்கை தெரிவித்துள்ளது ஷிப்ட் டைம் முடிந்ததும் கணினியை முடக்க ஒரு மென்பொருளை அமைத்துள்ளது. கணினியில், உங்கள் ஷிப்ட் டைம் முடிந்துவிட்டது. 10 நிமிடங்களில் கணினி நிறுத்தப்படும். தயவுசெய்து வீட்டிற்கு செல்லுங்கள்’ என வருகிறது. இதனை நிறுவனத்தின் HR இணையத்தில் பகிர்ந்துள்ளார்.