இந்தியாவில் பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11% மேலாக இருப்பதால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மற்ற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் வழங்கிய அனுமதியின் அடிப்படையில் மற்றும் அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.