அமெரிக்காவில் டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளின் பட்டியல் மற்றும் அதிகம் வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியல்களை தயார் செய்து வெளியிட்டது. இந்திய நாட்டில் பல மொழிகளை பேசும் பலதரப்பட்ட மக்கள் வாழும் நிலையில் அவர்களின் உணவு பழக்கவழக்கங்களும் வேறுபட்டு காணப்படுகிறது. இந்நிலையில் இந்திய நாட்டில்  அதிக அளவில் வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் 10-வது இடத்தை உப்புமா பெற்றுள்ளது. அதன் பிறகு அதிகம் வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் ஜல் ஜீரா பானம் உள்ளது.

இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த இடங்களில் கஜக், தேங்காய் சாதம், பண்டா பட், அலூ பய்ங்கன், தண்டை, அச்சம், மிர்சி கா சலன், மல்புவா ஆகியவைகளிடம் பெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம்ம ஊர் மக்களுக்கு பிடித்த தேங்காய் சாதம் வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் இடம் பெற்றதுதான். அதேபோன்று அதிக அளவில் வெறுக்கப்படும் உப்புமா பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளதும் ஆச்சரியமான ஒன்றுதான். இதைத்தொடர்ந்து அதிகம் விரும்பப்படும் உணவுகள் பட்டியலில் மேங்கோலசி முதலிடத்தில் இருக்கும் நிலையில் அதற்கு அடுத்த இடங்களில் சாய் மசாலா, பட்டர் கார்லிக் நான், தந்தூரி போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த பட்டியலில் பெரும்பாலானவர்களால் மிகவும் விரும்பப்படும் பிரியாணி 6-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by TasteAtlas (@tasteatlas)