2 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று மாலை கேரளா போகிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உட்பட பல நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். இதையடுத்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் என்று சொல்லப்படும் இத்திட்டம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் செலவில் சென்ற 2014-ம் வருடம் துவங்கப்பட்டது.

கொச்சி மாவட்டத்திலிருந்து செயல்படுத்தப்படும் இந்த வாட்டர் மெட்ரோ 10 தீவுகளை ஒன்றிணைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்டர் மெட்ரோ திட்டத்துக்கு முதல்கட்டமாக கொச்சி கப்பல் கட்டுமான தளத்திலிருந்து மின் மற்றும் எரிப்பொருளில் இயங்கக் கூடிய 8 கலப்பின கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாட்டர் மெட்ரோ மாநிலத்தின் சுற்றுலாத் துறையும், பொது போக்குவரத்தையும் ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.