
அசாம் தேயிலை தோட்டங்களில் கம்பீரமாக வாழ்ந்து வந்த மிகப் பெரிய யானை பிஜூலி பிரசாத் என்ற யானை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை எனவும் கூறப்படுகின்றது. 89 வயதாகும் இந்த யானை இன்று அதிகாலை 3:30 மணியளவில் தி வில்லியம்சன் மகோர் குழுமத்தின் பேகாலி தேயிலைத் தோட்டத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. இந்த யானைக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாஸ்டர் ஆலிவர் சாகிப் பிரசாத்தின் பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.