ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனியா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஓய்வுக்கு பின்னர் நிதி பாதுகாப்பை பெரும் விதமாக ஒவ்வொரு மாத சம்பளத்திலும் 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் தொகைக்கு வருடாந்திர வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. ஊழியரின் மருத்துவ அவசர நிலை மற்றும் சொத்து வாங்குதல் மற்றும் கல்வி செலவு ஆகியவற்றிற்காக பி எப் தொகையை ஊழியர்கள் பெரும் வசதி உள்ளது.

அதாவது ஒரு சந்தாதாரர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக வேலையில் இல்லாமல் இருந்தால் முழு பிஎஃப் தொகையையும் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு மாதம் வேலை இல்லாமல் இருக்கும் ஊழியர்களுக்கு 75 சதவீதம் வரை பிஎப் தொகை திரும்ப வழங்கப்படும். ஆன்லைன் மூலமாக அல்லது வங்கிக்கு நேரடியாக சென்று ஊழியர்கள் தங்களின் பி எப் தொகையை திரும்ப பெற முடியும்.

அதுவே ஆன்லைன் மூலமாக பிஎஃப் தொகையை பெறுவதற்கு https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று கோரிக்கையை முறையிட்டு பி எஸ் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். பிஎஃப் தொகைக்கு விண்ணப்பித்த சுமார் 20 நாட்களுக்குள் உங்களுக்கான பிஎஃப் தொகை வங்கி கணக்குக்கு நேரடியாக வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.