பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷா தற்போது ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் மிக குறைந்த வயதில் ஐசிசி தலைவர் ஆக பொறுப்பேற்றுள்ளார். அதோடு ஐசிசி தலைவராகும் 5-வது இந்தியர் என்ற பெருமையையும் ஜெய்ஷா பெற்றுள்ளார். இவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகன் ஆவார். இந்நிலையில் ஜெய்ஷா ஐசிசி தலைவராக பொறுப்பேற்பதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜா அவரை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது விராட் கோலி ஜெய்ஷாவை வாழ்த்தி பதிவிட்டு இருந்த நிலையில் அதனை விமர்சித்து பிரகாஷ்ராஜ் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஐசிசி தலைவராக போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டதற்காக பேட்ஸ்மேன், பவுலர், விக்கெட் கீப்பர், பில்டர் மற்றும் ஆல் ரவுண்டர். இந்தியா உருவாக்கிய மிகப்பெரிய லெஜன்ட் அவர்களுக்கு அனைவரும் கைத்தட்டி வாழ்த்துக்களை தெரிவிப்போம் என்று விமர்சித்துள்ளார்.
