இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். தற்போதைய சிஇஓ ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூடி புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்தது.

இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரும் ஒப்புதல் வழங்கினார். இதன் காரணமாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக அவர் நாளை பதவி ஏற்கிறார். மேலும் நடபாண்டில் பீகார் சட்டமன்றத் தேர்தல், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், KL, west bengal , அசாம், புதுச்சேரி தேர்தல் மற்றும் 2027 ஆம் ஆண்டு உத்திர பிரதேச தேர்தல் போன்றவைகள் இவர் தலைமையில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.