
இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் வல்லுநர் ஏ.ஜி.நூரானி. இவர் முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் ஆவார். இவர் நேற்று வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவினால் திடீரென காலமானார். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் தொடர்பான ஒரு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
இந்நிலையில் நூரானி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான ஒரு புத்தகத்தையும் எழுதி வந்தார். ஆனால் அதற்குள் நேற்று நேற்று இரவு அவர் மரணம் அடைந்துவிட்டார். இவர் இந்தியா காஷ்மீர் விவகாரம் சீனா மற்றும் இந்தியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் எழுதியுள்ளார். மேலும் இவருடைய மரணத்திற்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்