இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி, தனது அசுர வேக ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசி, எதிரணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்துள்ளார்.
வைபவ்வின் இந்த அசாத்தியமான பேட்டிங் திறமையைக் கண்டு வியந்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம், சமூக வலைதளத்தில் ஒரு சுவாரசியமான பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியா இவரைத் தேர்வு செய்யவில்லை என்றால், வைபவ் சூர்யவன்ஷி நான்கு ஆண்டுகள் தகுதி காலத்தை முடித்துவிட்டு ஐஸ்லாந்து அணிக்காக விளையாடலாம். அப்போதும் கூட அவர் ஒரு டீன்-ஏஜ் (இளம் வயது) வீரராகவே இருப்பார்! இது ஒரு சிறு கற்பனைதான்” என நகைச்சுவையாகப் பாராட்டியுள்ளது.
If India did not pick him, Vaibhav Suryavanshi could complete the 4-year qualification period to become an Icelandic cricketer, and he would still be a teenager! Just speculation.
— Iceland Cricket (@icelandcricket) March 29, 2026
வைபவ்வின் கிரிக்கெட் பயணம் ஒரு திரைப்படக் கதைக்கு இணையானது. அதாவது ஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ. 1.1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் ‘கோடீஸ்வரர் ஆன வீரர் என்ற சாதனையைப் படைத்தார். தனது அறிமுகத் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசி அதிரடி காட்டினார்.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் (U-19) அணியிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்த வைபவ், தற்போது ஐபிஎல் 2026-ன் முதல் போட்டியிலேயே 17 பந்துகளில் அரைசதம் அடித்து அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளார். அதிவேக ரன் குவிப்பு, அச்சமில்லாத பேட்டிங் என இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கையாக உருவெடுத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை முன்னாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
