இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் அதிக வட்டி பெற்ற மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் பிஎம் ஜன்தன்(ஜீரோ பேலன்ஸ்) சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் தேவையான தொகையை பராமரிக்க தவறினால் மட்டுமே வங்கிகள் அபராதம் விதிக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் MAB பராமரிக்காத கணக்குகளில் இருந்து 8,500 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.