உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னையில் பிறந்த 18 வயதான குகேஷ் வென்றுள்ளார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழன் என்ற ‌ பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குகேஷுக்கு வாழ்த்து கூறும் போது தெலுங்கு பையன் என்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார் என்றும் கூறினார். சென்னையில் பிறந்த குகேஷை தெலுங்கு பையன் என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணும் தற்போது குகேஷை தெலுங்கு பையன் என்று கூறியுள்ளார்.

அதாவது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதற்காக வாழ்த்து கூறும் போது அவரை தெலுங்கு பையன் என்று பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக செஸ் போட்டியில் குகேஷ் கிராண்ட் மாஸ்டர் உள்ளிட்ட பட்டங்களை வென்ற போதெல்லாம் அவரை யாரும் தெலுங்கு பையன் என்று சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் தற்போது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவுடன் தெலுங்கர் என்று கூறுகிறார்கள். இது நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இணையதளங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் தமிழனான குகேஷை தெலுங்கர் என்று ஆந்திர துணை முதல்வர் மற்றும் முதல்வர் ஆகியோர்  குறிப்பிட்டு பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.