
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நாட்டில் பெண்களின் மேம்பாடு என்ற சொல்லை, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என மாற்றி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பெண்களின் நிலை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், ராணுவம் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கழிப்பறைகள் மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற பிரச்சனைகள் குறித்து பேசிய முதல் பிரதமர் நான் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.