இந்தியாவின் ஸ்ட்ரீட் ஃபுட் கலாச்சாரத்தில் பாணிபுரிக்கு தனி இடம் உண்டு. ஆனால் தற்போது ஒரு பேஷன் கன்சல்டன்ட் ‘மேற்கிந்திய கலாச்சாரம் என்ற ’ பெயரில் பாணிபுரி சாப்பிடும் மரபையே கேள்விக்குள்ளாக்கி உள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோச் ப்ரியா வாரிக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், கை வைத்து  சாப்பிடாமல், பாணிபுரியை ‘காண்டே’ மற்றும் ‘ஸ்பூன்’ கொண்டு மெத்தனமாக சாப்பிடுகிறார். மேக்கப் கெடுக்காத வகையில் பாணிபுரி சாப்பிடும் ‘ஸ்டைலிஷ் ஹேக்’ இது என விளக்கம் அளித்த அவர், “சுய மரியாதையையும் ஸ்டைலும் இரண்டையும் காப்பாற்றிக்கொண்டு பாணிபுரியை ருசிக்கலாம்” என குறிப்பிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by PWFA: Personality Development, Counselling (@priawarrickfinishingacademy)

“>

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவ, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இதுவா பாணிபுரி சாப்பிடும் நாகரிகம்?”, “மூஞ்சியில் மழை பொழியட்டும், ஆனா பாணிபுரியை கைல தானே சாப்பிடணும்!” என நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

ஒரு நெட்டிசன் கோபத்துடன், “இதைக் கண்டு மனசு  வலியடிக்குது!” என பதிவு செய்துள்ளார். மற்றொருவர் “முக அழகு போச்சுனா மீண்டும் மையக்கூடலா போய்டலாம், ஆனா… பாணிபுரி கலாச்சாரம் போனா?” எனக் கூறியுள்ளார்.