நபர் ஒருவர் எருமை மாட்டை விலை உயர்ந்த தங்க சங்கிலியால் அலங்கரித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்களை பார்த்து வருகிறோம். அதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை வெகுவாக கவர்ந்து விடும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் நபர் ஒருவர் எருமை மாட்டுக்கு தங்க சங்கிலி அணிவிக்கிறார். இதன் எடை 10 கிலோ இருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாஷல்லாஹ் மாட்டுக்கு 10 கிலோ தங்கச் சங்கிலி என்ற தலைப்புடன் வீடியோவை பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவின் தலைப்பை படித்த பலரும் அது மாடு அல்ல எருமை என்று சுட்டிக்காட்டுகிறார்கள். பலர் எருமை மாட்டுக்கு 10 கிலோ சங்கிலி அணிவித்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

King creator இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@king_creator787)