ஜூன் மாதம் முடிவடைந்து ஜூலை மாதம் தொடங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய நேரடி விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஜுலை மாதம் சில முக்கியமான நிதி விஷயங்களின் சட்டத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கும். வருமான வரி ரிட்டர்ன், கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு தொடர்பான பல விதிகள் 1ஆம் தேதி முதல் மாறப்போகிறது. இந்த மாற்றங்கள் சாமானியர்களின் வாழ்க்கையில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். சில வங்கிகள் 15 நாட்கள் இயங்காது.

தரமில்லாத செருப்பு மற்றும் காலணி உற்பத்தியில் கட்டுப்பாடு, வருமான வரி தாக்கல், புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் வரும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் கிரெடிட் கார்டுகள் மூலம் 7லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் 20% TCS கட்டணம் செலுத்த வேண்டும். CNG விலையில் மாற்றம் இருக்கலாம். வரி செலுத்துபவர்கள் தங்கள் வருமான வரி கணக்கை (ITR) ஜூலை 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.