பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் நடக்கும் என்று விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான் பேசியுள்ளார்.

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சீரான இடங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார் .

அந்த வகையில் சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் . நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இதற்கிடையில் தேர்தல்  வியூகர் பிரஷாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேசியது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து பேசிய சீமான், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாடு என்றால் என்ன தெரியும்? எத்தனை ஏரி, எத்தனை குளம், எத்தனை ஆறு, எத்தனை சமூக மக்கள் என்பது அவருக்கு எப்படி தெரியும். உடலில் கொழுப்பு கேள்விப்பட்டிருப்பீங்க.. பணக் கொழுப்பு கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் இது எல்லாம் நடக்கும். நான் அதை பற்றி பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.