தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து மீண்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளி வளாகம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு டெங்கு போன்ற காய்ச்சல்கள் அதிக அளவில்  பரவி வருவதால் மேற்கூரைரைகளில் தங்கி உள்ள மழை நீரை  உடனடியாக அகற்ற வேண்டும்.

பள்ளி கட்டடத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளியின் மின்சாதனங்களை மாணவர்கள் கொண்டு இயக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. அடுத்ததாக பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை மற்றும் மதிய உணவு சுத்தமாக செய்யப்பட்ட வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் போதை பொருட்களால் அடிமையாகுவது தவிர்க்க உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.