
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் மற்றும் கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அக்டோபர் 19-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் ரத்னகுமார் லியோ படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவர் தற்போது லியோ படத்தின் சூட்டிங் நடைபெறும் காஷ்மீருக்கு கிளம்பி சென்றுள்ள நிலையில் அங்கிருந்து தன்னுடைய கையில் கூலிங் கிளாஸ் இன் ஒரு பகுதியை மட்டும் கையில் வைத்தபடி புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் உடைந்த ஒரு கண்ணாடி என தற்போது கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதன் காரணமாக லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
Never say die 👊#Leo#Kashmir#ShootingDiaries pic.twitter.com/91lnvpTR0Q
— Rathna kumar (@MrRathna) February 19, 2023