
விண்வெளி நிறுவனமான நாசா நிலவில் போக்குவரத்துக்காக முதல் சந்திர ரயில் அமைப்பை உருவாக்குவதற்கு புதிய திட்டமிட்டுள்ளது. நாசாவின் திட்டங்களின் படி ஒவ்வொரு மிதக்கும் ரோபோவும் 30 கிலோ வரையிலான சரக்குகளை ரயில் பாதைகளில் கொண்டு செல்ல முடியும். பூமியில் இருக்கும் ரயில் பாதையை போல் இல்லாமல் அவை கட்டப்பட்டு தரையில் துளையிடப்படுகின்றன. அந்தத் தடங்கள் சந்திரனின் மேற்பரப்பில் வெறுமனே இருக்கும்.
இதில் எந்த சேதமும் ஏற்படாது. சில முன்மாதிரி ரோபோக்கலுடன் இந்த யோசனை முதலில் பூமியில் சோதனை செய்யப்படும். இந்த பாதை உருவாக்குவதன் மூலமாக எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்கள் இலகுவானதாக அமையும் என்று கூறப்படுகிறது. மணிக்கு சுமார் 1.61 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் இந்த ரோபோக்களில் வண்டிகள் பொருத்தப்படும். ஒரு நாளைக்கு இது 100 டன் பொருட்களை நாசா தளத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று நாசா கூறியுள்ளது.