
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக ஆட்சியமைக்க இருக்கிறது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனையடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 2 கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.