
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு தரப்பினரும் வயநாட்டுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கின்றனர். அதேபோன்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இவர் பாய், தலையணை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் “வயநாட்டில் மறக்க முடியாத நாளின் நினைவுகள்” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு வயநாட்டைச் சேர்ந்த மக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து தனது கருத்துக்கு எம்.பி விளக்கம் கொடுத்தார். மறக்க முடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருள் தரும் என்று பதிவிட்டுள்ளார்.