சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பேசப்படும் வீடியோவில், “மூக்கில் மெழுகு குச்சி(“wax stick) வைத்து முடியை வேரோடு பிடுங்கும்” எனும் விசித்திரமான போக்கைப் பின்பற்றிய இளம் பெண் ஒருவர் கேமரா முன்பே மயங்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

சில வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவில், சாம் என்ற பெண் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த சவாலில் ஈடுபட்டபோது, அவரது துணைவர் மூக்கிலிருந்த மெழுகு குச்சியை இழுக்கும் தருணத்தில் அவர் திடீரென நடுங்கி, மயக்கமடைந்த காட்சி வெளிவந்துள்ளது.

இந்த அதிர்ச்சி தரும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மூக்கில் முடியை வேரோடு அகற்றுவது அழகுக்காக பின்பற்றப்படும் புதிய போக்காக மாறியுள்ள நிலையில், இதன் உடல்நல அபாயங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். “மூக்கில் முடி அழகாகத் தெரியாமல் இருந்தாலும் அது உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதி” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Daily Mail (@dailymail)

“>

நிபுணர்கள் விளக்குவதாவது, முடியை வெட்டுவது பாதுகாப்பானதாக இருந்தாலும், மெழுகுவதில் முடி வேரோடு பிடுங்கப்படுவதால் மூக்கின் மென்மையான அடுக்குகள் சேதமடைய வாய்ப்பு அதிகம். இதன் விளைவாக தொற்றுகள், வீக்கம், மற்றும் சுவாசக் குறைபாடுகள் ஏற்படலாம். சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக பரவியுள்ள இந்த வீடியோ, கண்மூடித்தனமாக ஒவ்வொரு ட்ரெண்டையும் பின்பற்றுவது ஆபத்தானது என்பதை நினைவூட்டுகிறது.