சில தினங்களுக்கு முன்பாக அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு புதிய பதவி வழங்கும்போது யோசித்துதான் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது, “பாஜக ஐ டி விங்க்  தலைவராக இருந்தபோது கடந்த 2023 ஆம் வருடம் பாஜகவில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் .இதனையடுத்து திடீரென்று விஜயை சந்தித்து TVK  கட்சியில் இணைந்து இருக்கிறார் .அவருக்கு கட்சியின் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு வருடங்களில் ஐந்து முறை கட்சி தாவி இருக்கிறார் நிர்மல் குமார்.

இந்த நிலையில் TVK கட்சியில் சேர்ந்த சில நிமிடத்திலேயே நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. திடீரென்று கட்சி மாறி இருக்கும் இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தான் சிடிஆர் நிர்மல் குமார் கட்சி தாவினால் அதிருப்தியில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிச்சாமி. இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். கட்சிக்காக உழைக்கக்கூடிய கட்சி அறிவிக்கும் போராட்டங்களில் பங்கேற்க கூடிய தகுதியான நபர்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளாராம்.

மேலும் அண்ணா தொழிற்சங்க பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை வழங்கியிருக்கிறார் . குறிப்பாக பாஜகவில் இருந்து வந்த அதிமுகவுக்கு வந்த சிடிஆர் நிர்மல் குமாரை கட்சியில் சேர்த்ததை தவறு என்றும் அவருக்கு மாநில பொறுப்பு கொடுத்தது மிகப்பெரிய தவறு என்று குறிப்பிட்டார். இனிமேல் வெளியில் இருந்து கட்சிக்கு வருபவர்களுக்கு பொறுப்பு கொடுக்கும் போது மிக கவனமாக யோசித்துப் பார்த்து தான் பொறுப்பு கொடுக்க வேண்டும் எனவும் அவர் பேசியதாக கூறப்படுகிறது.