சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகும் சில வீடியோக்கள் கற்பனை செய்ய முடியாத அளவு திருப்பங்களை கொண்டிருக்கும். அந்த வகையில், தற்போது ஒரு தந்தை தனது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், தந்தை ஒருவர் தனது மகளுடன் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது திடீரென அங்கு வரும் ஒரு இளைஞர், அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கிறார். இதைப் பார்த்த தந்தை கடும் ஆத்திரமடைந்து அந்த இளைஞருடன் மோதுகிறார். ஆனால், அதே நேரத்தில் அங்கு வரும் மற்றொரு நபர், தந்தையை தடுத்து நிறுத்தி அவரை நகர விடாமல் பிடிக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Naughty Foofaji (@foofaji)

தந்தை போராடிக்கொண்டிருக்கும் போதே, அந்த இளைஞர் அப்பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் செல்கிறார். ஒரு சில வினாடிகளில் நடந்த இந்த ‘சினிமா பாணி’ சம்பவம், அங்கிருந்தவர்களையும் பார்ப்பவர்களையும் உரைய வைத்துள்ளது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘foofaji’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:

“இது என்ன நிஜமாவே நடந்ததா? இல்லை செட் செய்யப்பட்ட நாடகமா?” என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முழுக்க முழுக்க சினிமா கிளைமாக்ஸ் போலவே இருக்கிறது என ஒரு தரப்பினர் கமெண்ட் செய்துள்ளனர். அனைத்தும் திட்டமிட்டபடி நடப்பதாகத் தெரிவதால், இது ஒரு விழிப்புணர்வு வீடியோவாகவோ அல்லது குறும்படமாகவோ இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். மேலும் உண்மையோ அல்லது திட்டமிட்ட நிகழ்வோ, இந்த வீடியோ தற்போது இணையத்தின் ‘டாப் ட்ரெண்டிங்’ விஷயமாக மாறியுள்ளது.