மராத்தி சின்னத்திரையில் ‘தேவமானுஷ்’ தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகர் கிரண் கெய்க்வாட். இவரது மனைவி வைஷ்ணவி கல்யாங்கரும் ஒரு பிரபலமான நடிகை தான். தற்போது வைஷ்ணவி தனது சொந்த ஊரான கொங்கண் பகுதியில் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கிரண் கெய்க்வாட் மற்றும் வைஷ்ணவி ஆகிய இருவரும் ‘தேவமானுஷ் 2’ தொடரில் இணைந்து நடித்தபோது காதலித்து, கடந்த 2024 டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர். வைஷ்ணவி கொங்கண் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், கிரண் இப்போது ‘கொங்கணின் மருமகன்’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வைஷ்ணவி, சமீபத்தில் தனது கிராமத்திற்குச் சென்றிருந்தார். அங்குக் கைதேர்ந்த நபரைப் போல ஏணியின் உதவியுடன் தென்னை மரத்தில் ஏறி, கத்தியால் இளநீரைப் பறித்து, கீழே இறங்கி வந்து அதனைச் செதுக்கி குடித்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதற்குப் பின்னணி இசையாக “பொண்டாட்டி வேணும்னா கெத்தானவளா இருக்கணும்” என்ற பாடலையும் சேர்த்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “எங்க கெய்க்வாட் வீட்டுப் பெண்ணின் தைரியத்தை பாராட்டுகிறோம்”, “அக்கா பார்த்து.. கவனமாக இறங்குங்கள்” என கமெண்ட்களை குவித்து வருகின்றனர். சமீபத்தில் ‘காஜல்மாயா’ என்ற தொடரில் நடித்த வைஷ்ணவி, மீண்டும் எப்போது சீரியலுக்கு வருவார் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
