உச்சநீதிமன்றத்தில் சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நேற்று 3 மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதாவது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கறிஞர் ஜகன்நாத் உட்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுக்களின் செல்லுபடி தன்மையை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மூவரும் தங்கள் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக கூறிவிட்டனர்.

இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு எதிராக வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பான 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்ப பெற்றுள்ளனர். மேலும் இது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பதிவிட்டுள்ளது.