திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது “முதல்வர் வைத்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் தரவில்லை இபிஎஸ். செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்ன நடக்கிறது என பார்த்து வருமாறு முதல்வர் கூறியிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர் அமலாக்கத்துறை அதிகாரி போல் பேசி இருக்கிறார்.

மாரடைப்பு எப்போது, எப்படி வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இது கூட தெரியாமல் முதலமைச்சராக இபிஎஸ் எப்படி இருந்தார் என தெரியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார்.