இன்றைய டிஜிட்டல் உலகில் வினோதமான கண்டுபிடிப்புகளுக்கும், அத்தோடு கலந்த நகைச்சுவைக்கும் பஞ்சமே இல்லை. அந்த வகையில், சமையல் பாத்திரத்திற்கு ஒருவர் போட்டுள்ள ‘அதிநவீன’ பாதுகாப்பு முறை சமூக வலைதளங்களில் பலரையும் வியக்க வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், அடுப்பில் ஒரு பெரிய வாணலி (கடாய்) வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக உணவை மூடி வைக்க தட்டு அல்லது மூடியைப் பயன்படுத்துவோம். ஆனால், இந்த வீடியோவில் உள்ள நபர் ஒரு படி மேலே சென்றுள்ளார்.

கடாயின் மேல் மூடியை வைத்து, அதன் மேல் ஒரு பெரிய கரண்டியை  குறுக்காக வைத்துள்ளார். அந்த கரண்டியின் ஒரு முனையை கடாயின் ஒரு பிடியில் (Handle) நுழைத்து, மறுமுனையை மற்றொரு பிடியுடன் இணைத்து ஒரு பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டியுள்ளார். யாராவது திருட்டுத்தனமாக உணவை எடுத்துச் சாப்பிட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shiva Bhandari (@shivabhandari940)


இந்த நபரின் ‘அசாத்தியமான’ மூளையைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்த ஐடியாவைக் கண்டுபிடித்த இவருக்கு 51 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்ய வேண்டும்” என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  (shivabhandari940) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, பதிவேற்றப்பட்ட மூன்று நாட்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளைக் குவித்து வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் பதிவு தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், “என்னடா இது சமையல் அறைக்கு வந்த சோதனை?” எனப் பலரும் சிரிப்பு எமோஜிக்களைத் தட்டி வருகின்றனர்.