தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், கில்லி ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்-க்கு அப்படத்தின் விநியோகஸ்தர் மாலை அணிவித்தபோது, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க” என கோரிக்கை விடுத்தார். அதற்கு விஜய் ஓகே எனக் கூறினார். இதனால்,அவர் தனது முடிவை மாற்றிவிட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.