சேலம் மாவட்டம் சூரமங்கலம் நரசிதிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து படித்து வந்தார். கடந்த 2023, 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கௌதம் நீட் தேர்வை எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு எழுதிய நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்காததால் தற்போது நடந்த நீட் தேர்வை மூன்றாவது முறையாக எழுதினார். ஆனால் இந்த முறையும் தேர்வை சரியாக எழுதாததால் மன உளைச்சலில் இருந்த கௌதம் சில நாட்களாக யாரிடமும் பேசாமல் சோகமாகவே இருந்தார்.

நேற்று இரவு பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் கௌதம் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கௌதமின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீட் தேர்வால் சேலத்தில் மாணவர் கௌதம் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நீட் தேர்வில் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் ஒழிந்து விடும் எனக் கூறிய அத்தனையும் பொய். தம்பி கெளதம் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.