சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீடுகள் நீரில் மூழ்கி சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 27 பேர் காணாமல் போய் உள்ளனர்” என தெரிவித்துள்ளது. எப்போதும் மிகக் குறைந்த அளவிலேயே பெய்ஜிங்கில் மழை பதிவாகும். ஆனால் இம்முறை உயிரிழப்புகள் ஏற்படும் அளவிற்கு கனமழை பெய்திருப்பது அபூர்வமானதாக பார்க்கப்படுகிறது.