அமெரிக்காவின் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்தவர் தான் அனில் வர்ஷனே. இந்தியாவிலிருந்து 1968 ஆம் வருடம் அமெரிக்காவிற்கு சென்ற இவர் அங்கே குடியுரிமை பெற்றுள்ளார். இவரது மனைவி நாசாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கடந்த வருடம் அணில் வர்ஷனேக்கு வீடியோ கால் வந்துள்ளது. அவரது உறவினர் உயிருக்க ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது அணில் வர்ஷனேவை அழைத்துள்ளார். அப்போது அலுவலகத்தில் இருந்த வர்ஷனே இரண்டு நிமிடங்கள் அவருடன் பேசியுள்ளார்.

அப்போது அவர் ஹிந்தியில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து சக ஊழியர் ஒருவர் வர்ஷனே மீது நிறுவனத்தில் புகார் அளித்துள்ளார் இதை அடுத்து அக்டோபர் மாதம் அணில் வர்ஷனே பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அணில் வர்ஷனை தன்னிடம் எந்த கேள்வியும் கேட்காமல் இத்தனை வருட நேர்மையான பணியை பற்றி சிந்திக்காமல் நிறுவனம் தன்னிச்சையாக இத்தகைய முடிவை எடுத்து தன்னை வேலை நீக்கம் செய்து விட்டதாக அலபாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.