
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் நேற்றுடன் அவர் கட்சி தொடங்கி ஒரு வருடம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று நடிகர் விஜய் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்கள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார். அப்போது காலில் அணிந்திருந்த ஷூவை கழட்டிவிட்டு சென்ற விஜய் பின்னர் தன்னுடைய ஷூவை தன் கைகளால் தானே எடுத்துச் சென்றார். இந்த வீடியோவை தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள். இதனுடன் அமைச்சர் பொன்முடியின் செருப்பை நிர்வாகி ஒருவர் கைகளால் எடுத்து அணிவித்த வீடியோவையும் இணைத்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய செருப்பை தானே கைகளால் எடுத்துச் சென்ற வீடியோவை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி எங்க தலைவருக்கும் பிறருக்கும் இதுதான் வித்தியாசம் என்ற வகையில் பதிவுகளை போட்டு வருகிறார்கள். மேலும் இதோ அந்த வீடியோ,
கொத்தடிமை கட்சிக்கும் எங்கள் சுயமரியாதை கட்சிக்கும் உள்ள வேறுபாடு இது தான். pic.twitter.com/amDWcEbzIi
— Sangeetha -TVK✨ (@sangeet29332013) February 2, 2025