சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திண்டுக்கல்லை அடுத்து அம்பத்தூர் ரயில் நிலையத்தில் மூன்று மாத கைக்கு குழந்தையோடு ஆண் பயணி ஒருவர் ஏறி  உள்ளார். நீண்ட நேரமாக கைக்குழந்தை பசியால் அழுதுள்ளது. இதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்க தொடங்கினார்கள். இதனை அடுத்து மதுரை ரயில் நிலையத்தில் குழந்தையோடு அந்த நபர் இறங்கியவுடன் அவரை பின்தொடர்ந்து சில பயணிகளும் சென்றனர். ஒரு கட்டத்தில் குழந்தை கடத்தல் என்ற அச்சத்தில் அவரை தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குழந்தையுடன் வந்த பயணியை பிடித்து சக பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வாக்குவாதம் காரணமாக குழந்தை தூக்கி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மனைவிக்கு தகவல் கொடுத்து குழந்தையை அவரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு இரண்டு மணி முதலே பச்சிளம் குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது .

பலர் பாட்டில் பால் கொடுத்த போதும் குழந்தை பால் குடிக்கவில்லை. தொடர்ந்து அழுவதால் குழந்தையின் தொண்டை வறண்டு போனது. இதற்கிடையே ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளோடு இருந்த தாய்மார்களிடம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்று கேட்டபோது அவர்கள் மறுத்தார்கள் .அப்போது அங்கு வந்து கோவை செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் குழந்தைக்கு பால் புகட்ட முன்வந்து கோவை செல்லும் ரயில் புறப்பட 15 நிமிடங்கள் இருந்த நிலையில் குழந்தையின் அழுகை உணர்ந்து தாய் உள்ளத்தோடு வந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி குழந்தையின் பசியாற்றி  உள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.