
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி நடைபெறுவதற்கு முன்பு குழு பி பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி இருந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் துபாய்க்கு கிளம்பி சென்றது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி அடைந்தால் ஆஸ்திரேலியாவோடு அரை இறுதியில் மோதும் என்றும், இந்தியா தோல்வி அடைந்து இருந்தால் தென்னாப்பிரிக்காவுடன் மோதும் என்ற நிலையில் இருந்தது.
அதனால் இரண்டு அணிகளுமே துபாய்க்கு அனுப்பப்பட்டது. இந்திய அணி இதில் வெற்றி பெற்றதால் தென்னாப்பிரிக்கா உடனடியாக துபாயில் இருந்து இரண்டாவது அறை இறுதியில் பங்கேற்க பயணம் செய்தது. இது ஒரு தேவையற்ற பயணமாகவே தென் ஆப்பிரிக்க அணிக்கு இருந்தது. மீண்டும் அங்கிருந்து லாகூருக்கு தென்னாபிரிக்க அணி பயணம் செய்தது. இது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாய்ட் விமர்சித்துள்ளார். அதாவது “இது உலகின் மிகப்பெரிய முக்கியமான கிரிக்கெட் தொடர். ஆனால் இது பற்றி வெளியே சொல்லவே சங்கடமாக இருக்கிறது.
இந்த தொடருக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் கேலிக்கூத்தாக உள்ளது. இப்படி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்பது நகைச்சுவைக்குரிய வகையில் இருந்தது. எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இது முற்றிலும் முட்டாள் தனமானது. இதை வேறு எப்படி நான் சொல்ல முடியும். இது ஒரு உலக கிரிக்கெட் தொடர். ஒரு அணி இங்கிருந்து அங்கே செல்கிறது. நீங்கள் அங்கே விளையாடுவீர்கள் என்கிறார்கள். நீங்கள் அங்கு விளையாட மாட்டீர்கள் என்கிறார்கள். பின்னர் நீங்கள் மீண்டும் வந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள். இது நகைச்சுவையாக உள்ளது. ஆனால் அங்கு அந்த வீரர்களில் ஒருவராக நான் இருந்தால் எனக்கு இது நகைச்சுவையாக இருக்காது” என்று விமர்சித்துள்ளார்.