சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான “கயல்” படங்களில் வரும் காட்சிகளை காப்பி அடிப்பதாக சமூக வலைதளங்களில் தோல் செய்து காணொளி வெளியாகி உள்ளது. இந்த சீரியலில், கயல் ஒரு டூவீலரில் சென்று ஒரு செஃப்-இன் காரில் மோதுவது போன்ற ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இந்தக் காட்சி ஒரு திரைப்படத்தில் இருந்து நேரடியாக காப்பியடிக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராமில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் காட்சி அந்தப் படத்தில் இருந்தெ அப்படியே எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி, அதை வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, சீரியல் குழுவினருக்கு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்தக் காட்சி அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்டதாகவும், புதுமையாக எதையும் உருவாக்காமல் பழைய படத்தின் காட்சியை அப்படியே பயன்படுத்தியதாகவும் கிண்டல் செய்து வருகின்றனர்.