மேற்கு வங்கம் மாநிலத்தில் டைட்டானிக் கப்பலை போல வீடு ஒன்றை தன் சொந்த உழைப்பில் தம்பதி ஒருவர் கட்டி வருகின்றனர். கடந்த 1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் 1100 பேருடன் மூழ்கிய பிரம்மாண்டமான பயணிகள் கப்பல் டைட்டானிக். இது பற்றி 1997 ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தினால் கவர்ந்த அந்த தம்பதி டைட்டானிக் கப்பலை போல ஒரு வீடு கட்ட விரும்பியுள்ளனர். கொல்க த்தாவில் இந்த வருடங்களுக்கு முன்பு சிலி குரியின் பாசிதவா என்ற ஊருக்கு புலம்பெயர்ந்த மின்டு ராய் என்ற தம்பதி விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர்.

அவர்கள் டைட்டானிக் படத்தை பார்த்த பிறகு 2010 ஆம் ஆண்டு 435 சதுர அடியில் டைட்டானிக் கப்பல் வடிவில் வீடு கட்ட தொடங்கியுள்ளனர். பணம் அதிகம் இல்லாததால் கட்டிட தொழிலாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் தானே வீடு கட்ட தொடங்கினார். இதுவரை 15 லட்சம் ரூபாய் செலவு செய்து டைட்டானிக் வீட்டை தொடர்ந்து கட்டி வருகின்றார். இந்த ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் எனவும் இதன் மேல் தளத்தில் ஒரு உணவு விடுதியை தொடங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.