தொழில்நுட்பம் வளர வளர மனிதர்களின் வேலைகளிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை நாம் பார்த்து வருகிறோம். AI பலதரப்பட்ட நன்மைகளை தொழில்நுட்பம் கொடுத்தாலும் மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும் அபாயத்தை கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீ பேக் வீடியோக்கள் பலருடைய வாழ்க்கையோடு விளையாட தொடங்கியுள்ளது.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடியும் டீ பேக் வீடியோவால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து அவர் அதன் அபாயம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகை ஆலியா பட் டீப் பேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆலியா பட் அலங்காரம் செய்து கொள்வது போல  வீடியோ வைரலாக தொடங்கியுள்ளது. ஆனால் உண்மையில் அவை தீப் பேக் வீடியோக்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.