
சீனாவில் உடல்நிலை சரியில்லாததால் ஒரு மணி நேரம் மருத்துவ விடுப்பு கேட்ட இளம் பெண்ணை அந்த நிறுவனத்தின் HR கடுமையாக திட்டியுள்ளார். அவர் பெண் பணியாளரிடம் நீ மிகவும் பலவீனமாக உள்ளாய். இந்த காய்ச்சலை கூட தாங்க முடியாதா? இதனால் உன் மூளை என்ன கருகி போய்விட்டதா? என கேட்டுள்ளார்.
இந்த உரையாடலை பெண் பணியாளர் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வேதனை தெரிவித்தார். இதுபற்றி அறிந்ததும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பெண்ணை திட்டிய HR-ஐ பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தனர்.