இந்தியாவில் டிஜிட்டல் யூகம் தொடங்கிவிட்ட நிலையில், இணையதள பயன்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. அதன் பிறகு பலர் இன்டர்நெட் பயன்படுத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சில சமயங்களில் இணைய வேகம் அதிகமாக இருக்காது. இதனால் வேலையை உரிய நேரத்தில் செய்து முடிக்க முடியாமல் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இந்நிலையில் மின்னணு சாதனங்களில் இணைய வேகத்தை அறியும் வகையில் மொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பிக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மொபைல் போன்களின் டேட்டா அப்லோட், டவுன்லோட் வேகத்தை காட்டுவது கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கை இதுவாகும். இதன்மூலம் பிரச்னை போனில் உள்ளதா அல்லது நெட்வொர்க்கில் உள்ளதா என்பதை பயனர்கள் அறிந்துக் கொள்ள முடியும் என கூறப்படுகிறது.