மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி கேட்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகை 95 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போல இட்லி 17 ரூபாய், புரோட்டா 55 ரூபாய் என மாவட்ட அளவில் உணவுப் பொருட்கள் செலவினத்திற்கான தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாவட்டத்திற்கு மாவட்டம் மாற வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.