அன்றாட வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. காலை உணவாக பெரும்பாலும் இட்லி தோசை போன்ற உணவுகளை உண்பது வழக்கம். இதற்கான மாவை ஒரு நாள் முன்பே தயார் செய்து வைக்கின்றோம். இதில் சில மாவு கலவைகள் வீணாகி புளித்து விடும். இட்லி தோசை மாவு கலவை புளிக்காமல் புதிய மாவு போல இருக்க என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் உளுந்து ஊறவைக்கும் போது ஒரு மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறவைக்கும் போது 4 மணி நேரம் மட்டுமே ஊற வைக்க வேண்டும்.

இந்த நேர அளவைவிட இதை இரவு எல்லாம் ஊற வைப்பதால் நீங்கள் இதில் அரைத்து எடுக்கும் மாவு பிடித்து விடும். இந்த மாவு அரைக்கும் போது ஐஸ் வாட்டர் ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இது இரண்டையும் சேர்த்து கலக்கும் போது கைகளை பயன்படுத்தக் கூடாது. மாவு கலவையை டப்பா அல்லது ஒரு பாத்திரத்தில் கொட்டி காற்று உள்ளே புகாதவாறு பயன்படுத்த வேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு முறையும் மாவை கிண்டும் போது கரண்டியை கொண்டு கிண்ட வேண்டும். இந்த மாவு கலவையை போடும் பாத்திரத்தில் இரண்டு வெற்றிலை காம்பு போட்டு வைத்தால் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

அதனைப் போலவே மாவுக்கு மேல் வாழை இலையை நறுக்கி போட்டால் மாவு புளிக்காமல் இருக்கும். மாவு அரைத்து உப்பு போட்டு கலந்த பின்னர் அதில் ஐந்து ஓமவள்ளி இலைகளை போட்டாலும் மாவு புளிக்காது.

குளிர்சாதன பெட்டியில் வைக்கும் மாவுக்கு உப்பு சேர்க்காமல் வைத்தால் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.