கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு வந்த விமானங்களில் இங்கிலாந்தை சேர்ந்த 35 பி போர் விமானமும் ஒன்று. கடந்த 14ஆம் தேதி அந்த  விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. எனவே இந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அப்போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்வதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த விமானம் இங்கிலாந்து கடற்படைக்கு சொந்தமானது என்பதால் இங்கிலாந்தில் இருந்து 2 மெக்கானிக் மற்றும்‌ 2 பைலட்டுகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வந்த பிறகு விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி தொடங்கியது.

ஆனால் அவர்களால் கோளாறு சரி செய்ய முடியவில்லை. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட 25 பேர் தீவிரமாக முயற்சி செய்தும் கோளாறை சரிசெய்ய முடியவில்லை. எனவே அதனை சரக்கு ஏற்றி செல்லும் விமானத்தில் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.