இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு தேடுபவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 6 என்று இருந்த நிலையில் தற்போது 30 வரை அதிகரித்துள்ளதாக ரைட்மூவ்  இணையதளம் தெரிவித்துள்ளது. வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு காரணம் இங்கிலாந்தில் உள்ள வங்கிகளில் வீட்டு கடன் வட்டியை உயர்த்தியதுதான். இதனால் மக்கள் கடன் வாங்கி வீடு வாங்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டு வாடகைக்கு இருக்க முடிவு செய்துவிட்டனர்.

வாடகை வீடுகள் குறைவாகவே இருக்கும் பட்சத்தில் வீடுகளை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் கிளாடியா என்பவர் கூறுகையில், “தனது காதலன் மைக்கேலுடன் ஒரு படுக்கையறை கொண்ட பிளாடில்  தங்குவதற்கு மாதம் 2.3 லட்சம் வாடகை கொடுக்க வேண்டியதாக உள்ளது. இது எங்கள் இருவரது வருமானத்தில் பாதியாகும். ஆனாலும் வேறு வழி இல்லை” என தெரிவித்துள்ளார்.