
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து வெளிநாட்டிற்கு விந்து அணுக்கள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது அங்கு விந்தணு தானம் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்துள்ளது. இங்கிலாந்தின் விதிமுறைப்படி ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்திற்கு மேல் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் இவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் எந்த ஒரு விதிமுறைகளும் போடப்படவில்லை. இதனால் இங்கிலாந்து விந்தனு தானத்தை உலக அளவில் செய்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் கார்டியன் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து விந்தணுக்கள் மற்றும் கருமுட்டைகள் இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது இங்கிலாந்தில் விந்தணுக்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் கருமுட்டை விநியோகிக்கும் வங்கியான கிரையோஸ் இங்கிலாந்தில் மான்செஸ்டர் என்னும் பகுதியில் தனது இன்னொரு கிளையை தொடங்கியுள்ளது. மேலும் ஏற்றுமதியில் நான்கில் மூன்று பங்கை கொண்டது ஐரோப்பிய விந்தணு வங்கி. இந்த வங்கியானது ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் மட்டும் என்ற விதிமுறையை உலக அளவில் கையாண்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.