தென்னிந்திய திரையுலகின் ‘ஹாட் டாப்’ ஜோடிகளாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா ஆகியோரது திருமணம் பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகவும் ரகசியமாக நடந்து முடிந்தது. இது குறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக வாய் திறக்கவில்லை என்றாலும், ராஷ்மிகா தனது விரலில் அணிந்திருந்த மோதிரம் ரசிகர்களிடையே இந்தச் செய்தியை உறுதிப்படுத்தியது.
சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்து கொண்டார். அப்போது அவரது விரலில் இருந்த மோதிரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “இது என் வாழ்நாளில் மிகவும் முக்கியமான ஒன்று” என்று கண்ணடித்துச் சிரித்தபடி பதிலளித்தார். இது விஜய் தேவரகொண்டாவுடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள ஒரு அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.
இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதுவரை இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகத் தெரிகிறது.
https://twitter.com/Chrissuccess/status/2017645268246610317?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2017645268246610317%7Ctwgr%5Ec8d13ebc6aa3be1c83e6f3433bfce764cce54a81%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-10065627131077825065.ampproject.net%2F2601162341000%2Fframe.html
நீண்ட நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்கு இந்தத் திருமணத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், சமூக வலைதளங்களில் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
