தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் ஏராளமான வெற்றி பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கிட்டத்தட்ட 2500-க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் சினேகன் பிரபல கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது.

 

இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் காதல் கன்னிகா சினேகன், கவிதை கன்னிகா சினேகன் என தமிழில் பெயர் சூட்டினார். இந்நிலையில் தற்போது சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்களுடைய குழந்தைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலும் தங்கள் குழந்தைகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று சினேகன் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் பலரும் குழந்தைகளை பார்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.